அடி தூள்.! கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்- அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு

Follow Us

அடி தூள்.! கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்- அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு

 கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

எச்பி, டெல், ஏசர் நிறுவனங்களிடமிருந்து மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய பணி ஆணை வழங்கியுள்ளது


தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (லேப்டாப்) அல்லது டேப்லெட் வழங்கப்படும் என அறிவித்தார்.


மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் லேப்டாப் அல்லது டேப்லெட். வழங்கப்படும் எனவும் இதன் மதிப்பு சுமார் ரூ.20,000 என கூறப்பட்டது.

இந்த திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் லேப்டாப் தொடர்பாக ஏலம் (Tender) திறக்கப்பட்டது. இதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.


தற்போது லேப்டாப் வழங்கும் பணியின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கு மூன்று நிறுவனங்களுக்கு எல்காட் நிறுவனம் பணி ஆணை வழங்கியுள்ளது.

எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்கள் மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசுக்கு சப்ளை செய்ய உள்ளன. மடிக்கணினி மாதிரி மற்றும் அதில் இடம்பெறும் தொழில்நுட்ப அம்சங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இறுதி செய்தார். மூன்று நிறுவனங்களிடமிருந்து நேரடியாக தமிழ்நாடு அரசு இந்த மடிக்கணினிகளை கொள்முதல் செய்கிறது.


மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யும் பணியினை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மடிக்கணினிகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்வது மற்றும் அந்தத் திட்டத்தை எப்போது தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் துணை முதலமைச்சர் தலைமையிலான குழு கூடி முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments