மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் வேலை

Follow Us

மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் வேலை

 கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவின் கீழ் செயல்படும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்:


தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் – 1

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் – 2

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் – 1

அலுவலக உதவியாளர்/ எழுத்தர் – 1


தகுதிகள்:


தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்:


குற்றவியல் சட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம்

குறைந்தது 30 குற்ற வழக்குகளை கையாண்ட அனுபவம்

கணினி திறன் அவசியம்

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்


குற்றவியல் சட்டத்தில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம்

குறைந்தது 20 குற்ற வழக்குகளில் வாதாடியிருக்க வேண்டும்

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்


குற்ற வழக்குகளை கையாண்ட 3 ஆண்டுகள் அனுபவம்

ஆய்வு மற்றும் வரைவு திறன் அவசியம்

அலுவலக உதவியாளர்


ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

40 w.p.m வேகத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்

அடிப்படை கணினி திறன் அவசியம்

சம்பள விவரம்:


* தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.70,000 சம்பளமாக வழங்கப்படும்.


* துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.


* உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.


* அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: ஒப்பந்த முறையில் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எப்படி விண்ணப்பிப்பது? கடலூரின் மாவட்ட நீதிமன்றத்தின் https://cuddalore.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 2 புகைப்படம், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சென்று விண்ணப்பிக்கலாம்.


கடைசி தேதி: அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments