இந்திய ரயில்வேயில் 8,850 பணியிடங்கள்: சம்பளம்: Rs.35,400 தகுதி +2, ஏதாவது ஒரு டிகிரி!

Follow Us

இந்திய ரயில்வேயில் 8,850 பணியிடங்கள்: சம்பளம்: Rs.35,400 தகுதி +2, ஏதாவது ஒரு டிகிரி!

 இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board) மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரிவுகளில் 8 ஆயிரத்து 850 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.

                                                                               


நிலையான மத்திய அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் என தனித்தனியாகப் பதவிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.


பட்டதாரி நிலை பதவிகள் (Graduate Level Posts)


பட்டப்படிப்பை (Any Degree) முடித்தவர்களுக்காக மொத்தம் 5 ஆயிரத்து 800 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர், கூட்ஸ் டிரெயின் மேனேஜர் போன்ற மதிப்புமிக்க பதவிகள் இதில் அடங்கும். இந்தப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.

மொத்த காலியிடங்கள்: 5,800


கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி


பதவிகள்: Chief Commercial - Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant, Senior Clerk - Typist, Traffic Assistant.


விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: அக்டோபர் 21, 2025


விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 20, 2025


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் (அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு)


12 ஆம் வகுப்பு நிலை பதவிகள் (Undergraduate Level)


12-ம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றவர்களுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 50 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கான ஆரம்ப சம்பளம் மாதம் ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை இருக்கும்.


மொத்த காலியிடங்கள்: 3,050


கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி


பதவிகள்: Commercial - Ticket Clerk, Accounts Clerk - Typist, Junior Clerk - Typist, Trains Clerk


விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: அக்டோபர் 28, 2025


விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 27, 2025


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் (அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு)


விண்ணப்பக் கட்டணம்


தேர்வர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், முதல் நிலை கணினி வழித் தேர்வில் (CBT-1) பங்கேற்ற பிறகு, கட்டணத்தின் ஒரு பகுதி (அ) முழுத் தொகையும் வங்கி கணக்கிற்கு நேரடியாகத் திரும்ப வழங்கப்படும். இது தேர்வை எழுத ஊக்குவிக்கும் சிறந்த முயற்சியாகும்.


பொதுப் பிரிவினர்: விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதில் ரூ.400 தேர்வு எழுதிய பிறகு திரும்ப அளிக்கப்படும்.


எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர்: விண்ணப்பக் கட்டணம் ரூ.250. இந்த முழுத் தொகையும் தேர்வு எழுதிய பிறகு திரும்ப அளிக்கப்படும்.


தேர்வு செய்யும் முறை


தகுதியான விண்ணப்பதாரர்கள் பல கட்டத் தேர்வுகளின் அடிப்படையில், முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்யப்படுவார்கள்.


முதல் நிலை கணினி வழித் தேர்வு (CBT-1): இது தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள்.

2-ம் நிலை கணினி வழித் தேர்வு (CBT-2): இது பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும். இதில் பெறும் மதிப்பெண்கள் இறுதிப் பட்டியலுக்கு முக்கியம்.


தட்டச்சுத் திறன் தேர்வு / CBAT: டைப்பிஸ்ட் பதவிகளுக்குத் தட்டச்சுத் திறனும், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற பதவிகளுக்கு CBAT (Computer-Based Aptitude Test) தேர்வும் நடத்தப்படும்.


ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை: இறுதி நிலையில், தேர்வர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, ரயில்வேயின் மருத்துவத் தகுதிகள் சோதிக்கப்படும். இது ஆர்.ஆர்.பி. என்.பி.டி.சி. (Non-Technical Popular Categories) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பாகும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Post a Comment

0 Comments