தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் குழுவில் வேலை; 59 காலிப்பணியிடங்கள்..!

Follow Us

தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் குழுவில் வேலை; 59 காலிப்பணியிடங்கள்..!

 தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் பின்வரும் பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய முன்னாள் இராணுவ வீரர்கள் / முன்னாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                           


தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறித்தல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் உள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அக்டோபர் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 59 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


ஆய்வாளர் (BDDS) - முன்னாள் சுபேதார்/ சுபேதார் மேஜர் - 2 காலியிடங்கள் - ஊதிய அளவு 37,700-1,19,500


உதவி ஆய்வாளர் (BDDS) - முன்னாள் நாயிப் சுபேதார் 14 காலியிடங்கள் - ஊதிய அளவு 36,900-1,16,600


தலைமை காவலர் (BDDS) - முன்னாள் ஹவில்தார்/ நாயக் - 43 காலியிடங்கள் - ஊதிய அளவு 20,600-65,500


வயது வரம்பு


ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய பதவிகளுகு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.07.2025 தேதியின்படி, 50 வயதிற்குக் கீழ்முள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி


தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும். மேலும், CME, புனே அல்லது NSG அல்லது BCASஆல் நடத்தப்படும் 6 வார BDD படிப்பில் குறைந்தபட்சம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.


இவைமட்டுமின்றி, ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 CED பிரிவு அல்லது CME இன் EDD பிரிவு அல்லது NSG இன் BD பிரிவு அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மையம் - NBDC அல்லது விமான நிலையங்களில் BD பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் BDD-யை பற்றி பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை


வெடிகுண்டு நிபுணர்களுக்கான பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களின் விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகள் ஆகியவற்றுக்கான அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சுயவிவரங்கள் (Bio data) மற்றும் கல்விச் சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள். ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன்


கூடுதல் காவல்துறை இயக்குநர்,


செயலாக்கம். மருதம்,


எண்.17. போட் கிளப் சாலை,


ராஜா அண்ணாமலைபுரம்,


சென்னை 600 028


என்ற முகவரிக்கு 31.10.2025 க்கு முன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments