அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை இந்த மாதமே பெறலாம்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

Follow Us

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை இந்த மாதமே பெறலாம்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

 உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை காலத்தை ஒட்டி அனைத்து நியாய விலை கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர்-2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

                                                                                 


அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 – 35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீடான 12 – 35 கிலோ அரிசியை இம்மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் தங்களுக்குரிய அரிசியை பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments