வருடத்திற்கு 2 முறை மட்டும்தான் இந்த அனுமதி: ரேஷன் கார்டு ரூல்ஸ் திட்டவட்ட அறிவிப்பு

Follow Us

வருடத்திற்கு 2 முறை மட்டும்தான் இந்த அனுமதி: ரேஷன் கார்டு ரூல்ஸ் திட்டவட்ட அறிவிப்பு

 ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்யப் போகிறீர்கள் என்றால் இதற்கு வருடத்திற்கு 2 முறை மட்டும்தான் அனுமதிக்கப்படும் என்று ரேஷன் கார்டு தொடர்பாக புதிய விதிமுறையைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்.

                                                                      


இதனால், ரேஷன் அட்டையில் அடிக்கடி பெயர் சேர்த்தல், நீக்குதல் வேலைகளைச் செய்ய முடியாது.


உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், இதற்கு முன்பு நீங்கள் எப்போது வேண்டுமானலும், எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றம் செய்துகொள்ளலாம். ஆனால், இப்போது ஆண்டுக்கு 2 முறைதான் செய்ய முடியும் என்று புதிய விதிமுறையைக் கொண்டு வந்துள்ளார்கள். இது குறித்து மக்கள் சேவை யூடியூப் சேனலில் விளக்கமாகக் கூறியுள்ளனர்.

புதி விதிமுறையின்படி, விண்ணப்ப செயலாக்கத்தில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி, உங்கள் ரேஷன் அட்டையில் புதியதாக ஒரு குடும்ப உறுப்பினர் பெயர் சேர்க்க வேண்டும் என்றாலோ, அல்லது பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றாலோ, முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ, புதிய அட்டை கோரி விண்ணப்பம் செய்தாலோ ஆண்டுக்கு 2 முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்துள்ளார்கள்.


அதே போல, உங்கள் ரேஷன் அட்டையின் விவரங்களை பி.டி.எஃப் டவுன்லோட் செய்தாலும் அதுவும் வருடத்திற்கு 2 முறை மட்டும்தான் டவுன்லோடு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதே போல, ரேஷன் அட்டையில் குழந்தைகள் பெயர் சேர்க்க வேண்டும் என்றால் ஆதார் அட்டையை ஆதாரமாக வைத்து சேர்க்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments