பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் இ-ஆட்டோ வாங்குவதற்கான கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ.தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்திருப்பது: ஓட்டுநா் உரிமம் வைத்துள்ள 25 முதல் 45 வயது வரை உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு 3 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ. 3 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
இக்கடனைப் பெற தகுதியுள்ள அனைவரும் தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை மேலாளா்களை அணுகி உரிய விவரங்களைப் பெற்று விண்ணப்பத்தை அளித்துக் கடன் பெறலாம்.
0 Comments