WhatsApp கதை முடிந்தது.. மேட் இன் இந்தியா Arattai மெசேஜிங் ஆப்.. இனி வாய்ஸ் கால்.. சாட்டிங்.. எல்லாமே இருக்கு!

Follow Us

WhatsApp கதை முடிந்தது.. மேட் இன் இந்தியா Arattai மெசேஜிங் ஆப்.. இனி வாய்ஸ் கால்.. சாட்டிங்.. எல்லாமே இருக்கு!

 இந்தியாவை சேர்ந்த சோகோ (Zoho) நிறுவனமானது வாட்ஸ்அப் மேசேஜிங் ஆப்-க்கு நிகராக மேட் இன் இந்தியா தயாரிப்பாக அரட்டை மேசேஜிங் ஆப்-ஐ (Arattai Messaging App) களமிறக்கி இருக்கிறது.

                                                                           


இந்த ஆப் கடந்த சில நாட்களில் 100 மடங்கு வளர்ச்சியை எட்டி வருகிறது. இந்த ஆப்-இல் என்னென்ன பீச்சர்கள் இருக்கிறது? வாட்ஸ்அப் ஆப்-புடன் ஒப்பிட முடிகிறதா? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.


மேட் இன் இந்தியா ப்ரொடெக்ட்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனாலேயே ஷேர்சாட் (ShareChat), மோஜ் (Moj) போன்ற சோஷியல் மீடியா ஆப்கள் அசுர வளர்ச்சியை எட்டியிருக்கின்றன. ஆனால், மேசேஜிங் ஆப்களில் சொல்லிக் கொள்ளும்படி ஏதும் இந்தியாவில் இல்லை. ஆனால், இப்போது சோகோ நிறுவனத்தின் அரட்டை மேசேஜிங் ஆப் தலை தூக்கி இருக்கிறது.


இது வெறுமனமே மேட் இந்தியா ப்ரொடெக்ட்டாக மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட வாட்ஸ்அப்-க்கு நிகரான பீச்சர்களையும் கொடுப்பதால், இந்திய யூசர்களிடையே தனி வரவேற்பை பெற்றுள்ளது. சோகோ நிறுவனத்தின் நிறுவனர், ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருப்பதால், இதற்கு அரட்டை என்று பெயர் வைக்கப்பட்டது மட்டுமல்லாமல், அதன் லோகோவும் தமிழ் எழுத்தில் இருக்கிறது.


தமிழில் லோகோ


'அ' என்னும் எழுத்துடன் அரட்டை ஆப்-இன் லோகோ இருக்கிறது. சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்த ஆப் கடந்த சில நாட்களில் மட்டும் 100 மடங்கு வளர்ச்சியை எட்டி இருக்கிறது. நாளொன்றுக்கு 3,000 ஆக இருந்து புதிய சைன்-அப்கள் (New Sign-ups) இப்போது 3.5 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இதை ஸ்ரீதர் வேம்பு அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அதோடு உள்கட்டமைப்புகளை அப்டேட் செய்வது, யூசர் எக்ஸ்பீரியன்சை மேம்படுத்துவது, பக்-களை (Bugs) சரிசெய்வது உள்ளிட்டவற்றை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோக வரும் நவம்பர் மாதத்தில் பல்வேறு புதிய பீச்சர்களுன் அப்கிரேட் செய்யப்பட்ட அரட்டை வெர்ஷன் வெளியாக இருப்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.


மேட் இன் இந்தியா


இந்த அரட்டை மேசேஜிங் ஆப், இந்தியாவில் உருவாக்கப்பட்டிருப்தால், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதை பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதோடு அவரது ட்வீட்டில் பிரதமர் மோடியை டேக் செய்து இதை தெரிவித்துள்ளார். இதனால், அரட்டை மேசேஜிங் ஆப் கூடுதல் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.


வாட்ஸ்அப், பேக்புக், எக்ஸ் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவை தலைமையிடமாகவும், அங்கு உருவாக்கப்பட்டாகவும் இருப்பதால், அதற்கு மாற்றாக இருக்கும் மேட் இன் இந்தியா ஆப்கள் எளிதாக கவனம் பெறுகின்றன. ஏனென்றால், சமீப காலமாக அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான நட்புறவு இணக்கமாக இருக்கவில்லை.


வரிகள் விதிப்பு, எச்1பி விசா போன்ற காரணங்களால், அமெரிக்க ப்ரொடெக்ட்களுக்கு நிகரான இந்திய ப்ரொடெக்ட்களை வலுவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது, அதில் அரட்டை மேசேஜிங் ஆப் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது முந்தைய ஆப்களை போலல்லாமல், பீச்சர்களில் கிட்டத்தட்ட வாட்ஸ்அப்-க்கு நிகராகவே கொடுத்துள்ளது.


அரட்டை பீச்சர்கள்


வாட்ஸ்அப் போலவே இதிலும் சாட்கள், கால்கள் மற்றும் ஸ்டோரிகளை அனுக முடியும். இதுபோக கூகுள் மீட், ஸ்கைப் போன்ற ஆன்லை மீட்டிங் சேவையையும் இது கொடுக்கிறது. பிரவேட் சாட், குரூப் சாட் போன்றவை இதிலும் கிடைக்கிறது. டேக் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் வெப் போலவே இதிலும் கூடுதல் டிவைஸ்களை இணைத்து கொள்ளலாம்.


ஆகவே, மொபைல் மட்டுமல்லாமல், லேப்டாப் போன்ற டிவைஸ்களிலும் கனெக்ட் செய்து கொள்ளலாம். இதிலும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இருக்கிறது. ஆகவே, உங்களது மேசேஜ்களை நீங்கள் அனுப்பும் நபரை தவிர வேறு யாராலும் அனுக முடியாது. இப்போதே, பக்காவாக இருக்கிறது. நவம்பர் அப்கிரேடுக்கு பிறகு மேலும் பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.

Post a Comment

0 Comments