உங்கள் வீட்டில் 5 வயதுக்கு குறைவான குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்காக பால் ஆதார் கார்டு எடுக்க வேண்டும்.
பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார், முகவரி சான்று போன்ற ஆவணங்கள் கொண்டு அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டில் கைரேகை அல்லது கண் ஸ்கேன் எடுக்கப்படாது. ஆனால், குழந்தையின் புகைப்படம் பெற்றுக்கொள்ளப்படும். 5 வயது நிறைவடைந்ததும் மீண்டும் பைஓமெட்ரிக் புதுப்பிப்பு அவசியம்.
பால் ஆதார், பள்ளி சேர்க்கை, மருத்துவ சேவை, அரசு நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுவதால், பெற்றோர்கள் தாமதிக்காமல் குழந்தைக்கு இதைச் செய்து கொள்வது முக்கியம்.
0 Comments