மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கிராம நத்தம், நத்தம், சர்க்கார் புறம்போக்கு பகுதிகளுக்கு பட்டா வழங்க புதிய வழிமுறைகளை அறிவித்தது அரசு

Follow Us

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கிராம நத்தம், நத்தம், சர்க்கார் புறம்போக்கு பகுதிகளுக்கு பட்டா வழங்க புதிய வழிமுறைகளை அறிவித்தது அரசு

 மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கிராம நத்தம், நத்தம், சர்க்கார் புறம்போக்கு பகுதிகளுக்கு பட்டா வழங்க புதிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

                                                                               


இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர், மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளிலும் (பழைய சென்னை நகரம் நீங்கலாக) வருவாய் பதிவேடுகளில் உள்ள பதிவுகளை இன்றைய நிலையில் மேம்படுத்தவும், நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கவும், மாவட்ட வருவாய் நிர்வாக பராமரிப்பிற்கென நில ஆவணங்களை தயாரித்து அளிக்கவும் பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர். அதன்படி, 13 மாநகராட்சிகள் மற்றும் 65 நகராட்சிகளில் வருவாய் பின் தொடர் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தூய நில ஆவணங்கள் பராமரிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது.


மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நகர நில அளவை முந்தைய அரசு பதிவேட்டில் கிராம நத்தம், நத்தம், வீடு, வீட்டுமனை என பதிவு செய்யப்பட்டும், நகர நில அளவை பதிவேட்டில் வகைப்பாடு கலத்தில் சர்க்கார் புறம்போக்கு / அரசு மனை எனவும், அடங்கல் கலத்தில் நத்தம் எனவும் குறிப்பு கலத்தில் நில உடைமைதாரர் பெயர் அல்லது வீடு, வீட்டுமனை என பதிவாகியுள்ள புல எண்களில் நத்தம் நிலவரி திட்ட பணிகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களின் அனுமதி பெற்று கிரயத்து மனை என வகைபாடு மாற்றம் செய்து நில உடைமைதாரர் பெயரில் பட்டா வழங்க புதிதாக தோற்றுவிக்கப்படும் நத்தம் நிலவரி திட்ட தனி வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. நத்தம் நிலவரி திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் அளவிலேயே உரிய ஆணைகள், சுற்றறிக்கைகளை வெளியிட அறிவுறுத்தி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments