பட்டாவின் நில அளவீடு அவசியம்.. தாசில்தார் ஆபீசில் பத்திர எண்ணை நிலம் வாங்குவோர் தெரிந்து கொள்ளலாமா?

Follow Us

பட்டாவின் நில அளவீடு அவசியம்.. தாசில்தார் ஆபீசில் பத்திர எண்ணை நிலம் வாங்குவோர் தெரிந்து கொள்ளலாமா?

 நிலம் வாங்க முற்படுபவர்கள், எப்போதுமே பட்டா ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்துவது ஏன் தெரியுமா?

பட்டாவில் உள்ள அளவீடுகளில் குழப்பம் ஏற்பட காரணம் என்ன? அளவுகளையும் சரிபார்க்காவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? பட்டா எண் என்ன என்பதை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

                                                                              


நிலத்தின் அளவுகள் பெரும்பாலும் ஹெக்டேர், ஏக்கர், ஏர்ஸ் என்ற அடிப்படையில் தான் குறிப்பிடப்படுவதை பார்த்து இருப்போம். ஆனால், பத்திரங்களில் நிலத்தின் அளவுகள் சதுர மீட்டர், சென்ட் என்ற அடிப்படையிலேயே குறிக்கப்படுகிறது. ஆனால், இதனை பெரிதாக யாரும் கவனிப்பதில்லை.. அதேபோல, சொத்தின் சர்வே எண், பட்டா எண் போன்ற விபரங்களையும் துல்லியமாக யாரும் ஆராய்வதில்லை.


பட்டா ஆவணங்கள்


எப்போதுமே சொத்தை வாங்குவதற்கு முன்பு, பரப்பளவு? என்ன என்பதை முழுமையாக தெளிவாக விசாரிக்க வேண்டும்... நிலத்தை விற்பவர் சொல்லும் அளவுகள், அனைத்துமே அவரது பெயரிலுள்ள பத்திரத்திலும் பதிவாகி உள்ளதா? அதே விபரங்கள் பட்டா உள்ளிட்ட ஆவணங்களிலும் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.


ஒருவேளை உங்களது மனையின் அளவுகள் சதுர அடி, சதுர மீட்டரில் இருந்து, நில அளவை வரைபடத்தில் ஏக்கர், ஏர்ஸ் போன்ற அளவீடுகளில் இருந்தால் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. எனவே அளவீடுகளையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.


கன்வெர்ட்டர்கள்


1 சென்ட் என்பது, 435.60 சதுர அடி, 1 ஏக்கர் என்பது, 100 சென்ட், 1 மீட்டர் என்பது, 3.33 அடியாகும்.. அதேபோல, நில அளவுகள் தொடர்பாக கன்வெர்டர்கள் ஆன்லைனிலேயே இலவசமாக கிடைப்பதால், அதனை பயன்படுத்தியும் பட்டாவில் குறிப்பிடப்பட்ட நில அளவுகளை சரி செய்து கொள்ள வேண்டும்.


நில அளவை வரைபடத்தை பார்க்கும்போது, அதில் மொத்த பரப்பளவு குறிப்பிடப்பட்டு இருந்தாலும், பக்கவாட்டு அளவுகளை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும்.. ஒருவேளை இதில் வித்தியாசங்கள் தென்பட்டால் உடனடியாக நில அளவுகள் குறித்து அறிந்தவரை அணுகி உதவியை பெற வேண்டும்.


பட்டா எண் அறிவது எப்படி


அதேபோல பட்டா எண் என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.. நிலத்தின் உரிமையாளர் தங்களிடமுள்ள பட்டா ஆவணத்தில் பட்டா எண்ணை வைத்து, அதனை சரிபார்க்கலாம். இதற்கு, தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையின் eservices.tn.gov.in என்ற வெப்சைட் மூலம் பட்டா விவரங்களை அறியலாம். அதில் நிலத்தின் சர்வே எண், பட்டாதாரர் பெயர் போன்ற விவரங்களை உள்ளிட்டு பட்டா எண்ணை கண்டறியலாம்.


அல்லது நேரடியாகவே தாசில்தார் அலுவலகத்திற்கு நிலத்தின் சர்வே எண் மற்றும் உங்கள் விவரங்களை அளித்து, பட்டா எண்ணை அறியலாம். இதற்கு EC எனப்படும் நில உரிமையாளர் சான்றிதழ் தேவைப்படும்.. அதில் நிலத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண் போன்ற விவரங்கள் இருக்கும். அதேபோல, நீங்கள் நிலத்தை வாங்கியிருந்தால், நிலத்தை விற்பனை செய்த நபரிடமே பட்டா எண் விவரங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


நிலத்தை எப்படி அளப்பார்கள்?


அதேபோல நில அளவீடுகள் என்னென்ன? நிலத்தை எப்படி அளப்பார்கள்? என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நீங்களே நிலத்தை அளந்தும் பார்க்கலாம்..


இதற்கு முதலில் உங்களது நிலம் எத்தனை சதுர அடியில் உள்ளது? அதன் நிலத்தின் வடிவம் சதுரமாக உள்ளதா? செவ்வகமாக உள்ளதா? வெவ்வேறு கோணங்களில் உள்ளதா? என்பதை இன்ச்டேப்பில் மூலம் அளக்கலாம்.


டேப்பின் மேலே அடி கணக்கும், இன்ச்சும் கீழே சென்ட்டி மீட்டரில் காணப்படும். இதில், ஒரு அடி என்பது 12 இன்ச்சு, 30.48 சென்டி மீட்டர் சேர்ந்ததாகும். மீட்டர் கணக்காக இருந்தால் டேப்பில் 1 மீட்டருக்கு 3,28 அடியாகும். 1 ஏக்கர் இருந்தால் 100 சென்ட்டும், 100 சென்ட் என்பது 43560 சதுர அடியும் வரும்.. இதனை சதுரமீட்டரில் 4048 என்றும் சொல்லலாம்.. இதனை பயன்படுத்தியே நிலத்தை அளந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments