செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம், அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக செயற்கை நுண்ணறிவு ப்ரோகிராமிங் பயிற்சியை வழங்குகிறது. மேலும், இதன் மூலம் இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டே செல்கிறது. அந்த வகையில் 21-ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், அனைத்து துறைகளின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்பது அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. மருத்துவம், கல்வி, வணிகம், உற்பத்தி, மீடியா ஆகியவற்றில் ஏஐ-யின் தேவை அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த துறையின் தேவையை கருதி, புதிய படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. பள்ளிகளின் அளவிலேயே இதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், செயற்கை நுண்ணறிவு ப்ரோகிராமிங் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவச சான்றிதழ் படிப்பு
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் Cultus எனப்படும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து 12 வாரங்கள் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
என்னென்ன கற்பிக்கப்படும்?
சான்றிதழ் படிப்பில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அப்ளிகேஷன் உருவாக்குவதற்கான டிசைன் மற்றும் டெவலப் கற்பிக்கப்படும்.
மிஷின் லேனிங் அல்கரதம் பயன்படுத்தி தரவை பகுப்பாய்வு செய்யதல்
NLP மற்றும் கணினி விஷன் மாடல்களுடன் பணி செய்தல்
நிஜ உலகப் பிரச்சனைகளுக்கான ஏஐ கொண்டு தீர்வுகளை உருவாக்குதல்
ஏஐ தொழில்நுட்பத்தில் குழுக்களுடன் சேர்ந்து இயங்குதல்
தகுதிகள்
செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் படிப்பில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடிவுத்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விண்ணப்பதார்களின் வயது 18 முதல் 35 வரை இருக்கலாம்.
12 வாரங்கள் பயிற்சி
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 300 மணி நேரம், அதாவது 12 வாரங்கள் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. 50% வகுப்பு ஆன்லைனிலும், 50% வகுப்பு நேரடியாகவும் நடத்தப்படும்.
இதன் மூலம் இளைஞர்கள் தங்களின் சந்தேகங்களை நேரடியாகவே செயல்திறன் மூலம் தீர்வு காணலாம்.
வேலைவாய்ப்பு ஏற்பாடு
இப்பயிற்சியின் மூலம் தனியார் நிறுவனங்களில் ஏஐ டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், மிஷின் லேனிங் இன்ஜினியர், NLP இன்ஜினியர், ஏஐ ஆராய்ச்சி அசோசியேட் ஆகிய பதவிகளில் வேலைவாய்ப்புகள் பெற ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி முழுமையாக முடித்து திறன் மேம்பாட்டு பெறும் நபர்கள் இந்த வாய்ப்பின் மூலம் வேலைவாய்ப்புகளை பெறலாம். தொடக்கமே வருடத்திற்கு 4.5 லட்சம் வரை சம்பளத்தில் பணி வாய்ப்பைப் பெற முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு பயிற்சியை பெற விரும்பும் இளைஞர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4153 என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணபக் கட்டணம் ஆகியவை கிடையாது. இதற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தரும் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம். சுமார் 2,800 பேருக்கு இந்த பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு உதவித்தொகை வசதியும் உள்ளது.
0 Comments