கல்லூரி முடித்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்! நியூ இந்தியா இன்சூரன்ஸ்-ல் 550 நிர்வாக அதிகாரி பணியிடங்கள்.. தவறவிடாதீர்கள்!

Follow Us

கல்லூரி முடித்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்! நியூ இந்தியா இன்சூரன்ஸ்-ல் 550 நிர்வாக அதிகாரி பணியிடங்கள்.. தவறவிடாதீர்கள்!

 நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 550 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு. எந்தப் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

                                                                          


மாதச் சம்பளம் ரூ.50,925. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30, 2025.


மத்திய அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான செய்தி! நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் (New India Assurance Company - NIACL), நாடு முழுவதும் காலியாக உள்ள 550 Administrative Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்தப் பணிக்கு மாதம் ரூ.50,925 வரை சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

NIACL நிறுவனம் அறிவித்துள்ள இந்த 550 காலியிடங்களும் Administrative Officer பதவிக்கானவை. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduate/Post Graduate in any discipline) முடித்திருக்க வேண்டும். இது பொறியியல், கலை, அறிவியல் என எந்தத் துறை சார்ந்த பட்டதாரிகளுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.


விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

* SC/ ST பிரிவினர்: 5 ஆண்டுகள்


* OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்


* PwBD (Gen/ EWS) பிரிவினர்: 10 ஆண்டுகள்


* PwBD (SC/ ST) பிரிவினர்: 15 ஆண்டுகள்


* PwBD (OBC) பிரிவினர்: 13 ஆண்டுகள்

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாகும். மற்றவர்களுக்கு ரூ.850/- கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் மூன்று கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்:


I: Preliminary Examination (முதல்நிலைத் தேர்வு)


II: Main Examination (முதன்மைத் தேர்வு)


III: Interview (நேர்காணல்

விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 07, 2025 முதல் பெறப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 30, 2025 ஆகும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் New India Assurance நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.newindia.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments