12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை!

Follow Us

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை!

 இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையமாகும்.

                                                                       


1935ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ பரிசோதனை நிறுவனம் என நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.



இளநிலை செயலக உதவியாளர் (ஜெனரல்/ F&A/ S&P)


காலியிடங்கள்: 06

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 - 63,200/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: 10+2/XII அல்லது அதற்கு இணையான தேர்ச்சி மற்றும் கணினி வகை வேகத்தில் தேர்ச்சி மற்றும் DOPT ஆல் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி கணினியைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.



ஜூனியர் ஸ்டெனோகிராபர்


காலியிடங்கள்: 02

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500 - 81,100/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: 10+2/XII அல்லது அதற்கு சமமான மற்றும் அவ்வப்போது DoPT ஆல் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி ஸ்டெனோகிராஃபியில் தேர்ச்சி.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.


வயது தளர்வு: SC/ ST - 5 ஆண்டுகள்,

OBC - 3 ஆண்டுகள்,

PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,

PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,

PwBD (OBC) - 13 ஆண்டுகள்



எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://iicb.res.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்னர் தங்களது புகைப்படம் , கையெழுத்து , கல்வி சான்றிதழ்களை ஒலிநகல் எடுத்து தயாராகவைத்துக்கொள்ளவும்.



விண்ணப்ப கட்டணம்:


பெண்கள்/ ST/ SC/ Ex-s/ PWD - கட்டணம் கிடையாது

மற்றவர்களுக்கு - ரூ.500/-



தேர்வு செய்யும் முறை:


திறன் தேர்வு

எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2025

Post a Comment

0 Comments