தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட கீழ்கண்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
மருந்தாளுநர் (RBSK)
காலியிடங்கள் : 6
கல்வித் தகுதி :
i. மருந்தகத்தில் டிப்ளமோ அல்லது மருந்தியல் இளங்கலை அல்லது மருந்தியல் பட்டம். D
ii. தமிழ்நாடு மருந்தியல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதைப் புதுப்பித்து பதிவை உயிருடன் வைத்திருக்க வேண்டும்.
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.15000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது
வயது வரம்பு : இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் Gr-III (தொழிலாளர் MMU)
காலியிடங்கள் : 9
கல்வித் தகுதி :
i. பிளஸ்-டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii. மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் மருத்துவ ஆய்வகப் படிப்பில் (ஒரு வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொழில்நுட்ப காலம்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.13000/-
iii. நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலைகளைச் செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.13,000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது
வயது வரம்பு : இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
செவிலியர்
காலியிடங்கள் : 93
கல்வித் தகுதி : இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி (DGNM) அல்லது B.Sc., நர்சிங்கில் டிப்ளமோ.
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.18,000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது
வயது வரம்பு : இந்த பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://coimbatore.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு முறை தெளிவாக வாசித்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவண நகல்களை சுய சான்றொப்பமிட்டு, இணைத்து, கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்போது கீழ்கண்ட ஆவணங்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்:-
1. விண்ணப்பம்
2. விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும். முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. கல்வித்தகுதிக்கான சான்றின் -மதிப்பெண் சான்றின் நகல் - சுயசான்றொப்பமிட்டு
4. சாதிச்சான்றின் நகல் - சுயசான்றொப்பமிட்டு
5. இருப்பிடச் சான்றின் நகல் (குடும்பஅட்டை/ஆதார்அட்டை) சுயசான்றொப்பமிட்டு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட சுகாதார அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர்-18.
நிபந்தனைகள் :-
1. இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
3. பணியில் இணையும் போது பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) மற்றும் 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.
மேலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறுப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தொடக்க நாள்: 24/07/2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08/08/2025
0 Comments