பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே போல தான், ஆண் குழந்தைகளின் எதிர்காலத்தை செழிப்பாக்க தமிழக அரசு சார்பில் ஒரு தனித்துவமான சேமிப்பு திட்டமாக பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம்.
பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம்
ஆண் குழந்தைகளுக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 04 ஆம் தேதி தமிழக அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது. இதற்கு பொன்மகன் சேமிப்பு திட்டம், செல்வ மகன் சேமிப்பு திட்டம் என பல பெயரும் உண்டு. போஸ்ட் ஆபீஸ் மற்றும் அரசு வங்கிகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தில்
ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை சேமிக்கலாம். தொகையை மொத்தமாகவோ அல்லது மாதா மாதாமும் செலுத்தலாம். இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கு முற்றிலும் வரி கிடையாது. அதேபோல், இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் ரூ. 1.5 லட்சத்திற்கு வரி கிடையாது.பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அக்கவுண்ட் ஓபன் தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகள் வரை வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது மாதந்தோறுமோ பணத்தை சேமிக்கலாம்.இந்த திட்டத்தில் , 9.70% நிலையான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, இது மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை விட மிக அதிகம்.
தகுதி
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஆண் குழந்தை தமிழக அரசிடம் இருந்து வேறு எந்த நிதி உதவியையும் பெறக் கூடாது. ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் குழந்தைக்கு மட்டுமே பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியும்.விண்ணப்பதாரர் ஆண் குழந்தையாகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை (SC, ST, MBC, DNC) சேர்ந்தவராக இருக்க வேண்டும் அதேபோல், குழந்தையின் வயது 10 அல்லது அதற்குமேல் இருந்தால் அக்கவுண்ட் அந்த குழந்தையின் பெயரிலேயே ஓபன் செய்துக் கொள்ளலாம். 10 வயதிற்கும் குறைவாக இருந்தால் பெற்றோர் பெயரும் குழந்தையின் பெயரும் சேர்த்து அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.
போஸ்ட் ஆபீஸ் அல்லது அரசு வங்கியில் சென்று பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் பற்றி கூறினால் ஒரு விண்ணப்பப் படிவம் கொடுக்கப்படும் அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களையும் இணைத்தும் சேமிக்க விரும்பு தொகையும் சமர்பிக்கவும். பின்பு மாதம் மாதமோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ பணத்தை தவறாமல் அக்கவுண்டில் போட்டு வரவும். 15 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு ஒரு பெரிய தொகை உங்கள் மகனின் பெயரில் இருக்கும். 15 ஆண்டுகள் முடிந்த பிறகு ஒரு முறை மட்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளும் வசதி உள்ளது.
0 Comments