ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாக பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர், ஜூனியர் பொறியாளர், உதவி ஆடிட் அதிகாரி மற்றும் ஆடிட்டர் ஆகிய பதவிகள் பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மொத்தம் 111 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
மத்திய அரசின் ஊழியர்களுக்கான சேவையில் முக்கிய அமைப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செயல்படுகிறது. ஊழியர்களில் சம்பளத்தில் வைப்பு நிதி இந்த அமைப்பின் மூலம் சேமிக்கப்படுகிறது. முதன்மை அமைப்பான இதில் பல்வேறு கிளைகளில் உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
பொறியாளர் பணியிடங்கள்
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
நிர்வாக பொறியாளர் (சிவில்) 1
உதவி நிர்வாக பொறியாளர் (சிவில்) 16
உதவி நிர்வாக பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) 2
ஜூனியர் பொறியாளர் (சிவில்) 33
மொத்தம் 52
சென்னை உட்பட பட்னா, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்பூர், டெல்லி, சிம்லா, தானே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
ஆடிட்டர் பணியிடங்கள்
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
உதவி ஆடிட் அதிகாரி 14
ஆடிட்டர் 45
மொத்தம் 59
தகுதிகள் என்ன?
இப்பணியிடங்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசு துறைகளின் ஊழியர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிர்வாக பொறியாளர் பதவிக்கு ஒத்த இடுகைகள் (analogous posts) இருக்க வேண்டும் அல்லது 5 வருட சேவையில் நிலை 10 சம்பளத்தில் பணியில் இருக்கலாம் அல்லது 8 வருட சேவையில் நிலை 7 இல் பணியில் இருக்கலாம்.
உதவி நிர்வாக பொறியாளர் பதவிக்கு 3 வருட சேவையில் நிலை 7 கீழ் இருக்கலாம்.
ஜூனியர் பொறியாளர் பதவிக்கு 3 வருட சேவையில் நிலை 6 இல் பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதியாக விண்ணப்பதார்கள் சிவில் பொறியியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உதவி ஆடிட் அதிகாரி பதவிக்கு 5 வருட சேவையில் நிலை 6 இல் பதவியில் இருப்பவர்கள், 7 வருட சேவையில் நிலை 6 இல் பதவியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி சார்ந்த அனுபவம் தேவை.
ஆடிட்டர் பதவிக்கு 5 வருட சேவையில் நிலை 5 இல் பதவியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் தேவை.
சம்பள விவரம்
நிர்வாக பொறியாளர் பதவிக்கு ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை வழங்கப்படும்.
உதவி நிர்வாக பொறியாளர் பதவிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும்.
ஜூனியர் பொறியாளர் பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும்.
உதவி ஆடிட் அதிகாரி பதவிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும்.
ஆடிட்டர் பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள இப்பணியிடங்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்பப்படுவதால், விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். முதல் கட்டமாக 3 ஆண்டுகள் பணி நியமனம் வழங்கப்படும். மேலும், தேவையின் அடிப்படையில் அதிகரிக்கப்படலாம்.
விண்ணப்பிக்கும் முறை
EPFO-வில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அதிகாரிகள் https://www.epfindia.gov.in/site_en/Recruitments.php என்ற இணையதலத்தில் உள்ள அறிவிப்புடன் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யபப்ட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் வழியாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி
Shri Deepak Arya,
Regional Provident Fund Commissioner - II (Recruitment Division),
Plate A, Ground Floor,
Block II, East Kidwai Nagar,
New Delhi - 110023.
இதற்கான விண்ணப்பங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பெறபடாது. அந்த வகையில், இதற்கான அறிவிப்பு ஜூலை 18-ம் தேதி வெளியானது. செப்டம்பர் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2025
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள அதிகாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்
0 Comments