கன்னியாகுமரி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் காத்திருக்கும் வேலைக்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!

Follow Us

கன்னியாகுமரி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் காத்திருக்கும் வேலைக்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!

 குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பறக்கின்கால் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஒன்றுக்கு 10 நாட்களுக்கு மிகாமல் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநர் நியமிக்க தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

                                                                                


பதவியின் பெயர் : ஆற்றுப்படுத்துநர் (Counsellor)

பணியிட எண்ணிக்கை: 1 (பெண்)

மாத மதிப்பூதியம் : மதிப்பூதியம் நாளொன்றுக்கு ரூ.1000/- மட்டும் (ஒரு மாதத்திற்கு 10 நாட்கள் மட்டும்)

பணிபுரியும் இடம் : அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம், பறக்கின்கால்.

கல்வித் தகுதி : உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் போதும்.



எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://kanniyakumari.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு முறை தெளிவாக வாசித்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவண நகல்களை சுய சான்றொப்பமிட்டு, இணைத்து, கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


கண்காணிப்பாளர்

அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம்

சபரி அணை அருகில்

பறக்கின்கால்,

நாகர்கோவில்- 629001

தொடர்பு எண். 6383913239

04652-277014



முக்கிய தேதிகள்:


விண்ணப்ப தொடக்க நாள்: 31/07/2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08/08/2025


முழுமையாக பூர்த்தி செய்யபடாத விண்ணப்பம் மற்றும் குறிப்பிட்ட காலகெடுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments