தமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! சமூக நலத்துறை அறிவிப்பு.

Follow Us

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! சமூக நலத்துறை அறிவிப்பு.

 தமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சமுக நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

                                                                            


மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர். ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு, சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த இலவச தையல் மிஷின் பெற தகுதியானவர்கள்விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுயவேலைவாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானத்தைப் பெறுவதற்கு உதவும் இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது.


யார் யார் விண்ணப்பிக்கலாம்?


கைம்பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவற்ற ஏழைப்பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரரின் மனைவி ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.


தகுதிகள் :


விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று. இதில் குறைந்தபட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள் :


வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட குடும்ப ஆண்டு வருமான சான்று, இருப்பிடச் சான்று, தையல் பயிற்சி சான்று, வயதுச் சான்று, சாதிச் சான்று, விண்ணப்பதாரரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்கள், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர் அல்லது ஆதரவற்றவர் என்பதற்கான உரிய சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை


விண்ணப்பிப்பது எப்படி?


இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிடும்போது, தகுதியுள்ளவர்கள் ஆவணங்களுடன் தங்களது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது இசேவை மூலமும் விண்ணப்பிக்கலாம்.

சமூக நல அலுவலகத்தை அணுகி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது இசேவை மூலமும் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments