இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER GRADE - II/EXECUTIVE) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3717 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் கட்டாயம். அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஆகஸ்ட் 10, 2025 நிலவரப்படிகுறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 27 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) பொது அறிவு (General Awareness) பொதுப் பாடம் (General Studies) ஆகிய பிரிவுகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இதற்கான கால அளவு 1 மணி நேரம் ஆகும். இரண்டாம் பகுதி கட்டுரை வரைதல். இது 50 மதிப்பெண்களுக்கு 1 நேர கால அளவில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு ஜூலை 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 19ஆம் தேதி முதல் www.mha.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஆகும்.
0 Comments