காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் என்பது, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனத்தில் கற்பித்தல் அல்லாத பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வந்துள்ளது.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
ஜூனியர் டெக்னிக்கல் சூப்பரின்டென்ட்
காலியிடங்கள் : 3
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து, பி.இ/பி.டெக், எம்.எஸ்சி. முடித்துவிட்டு 5 ஆண்டுகள் பனி அனுபவம் கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.35,400 - ₹1,12,400 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது
ஜூனியர் டெக்னீஷியன்
காலியிடங்கள் : 13
கல்வித் தகுதி :
தொடர்புடைய துறைகளில் மூன்று வருட டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ₹21,700 to ₹69,100 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது
ஜூனியர் உதவியாளர்
காலியிடங்கள் : 11
கல்வித் தகுதி : கணினி செயல்பாடுகள் பற்றிய அறிவுடன் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ₹21,700 to ₹69,100 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://www.iiitdm.ac.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு முறை தெளிவாக வாசித்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.500 செலுத்தவேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தொடக்க நாள்: 14-07-2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14-08-2025 ; 08.00 PM
0 Comments