தமிழ்நாட்டிற்கு 277 பணியிடங்கள்... வங்கி வேலை வாய்ப்புங்க: விபரம் இதோ!!!

Follow Us

தமிழ்நாட்டிற்கு 277 பணியிடங்கள்... வங்கி வேலை வாய்ப்புங்க: விபரம் இதோ!!!

 டிகிரி முடித்தவர்களா நீங்கள் இந்தியன் வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க.

                                                                         


1500 பணியிடங்கள் இருக்கு. இதில் தமிழ்நாட்டிற்கு 277 பணியிடங்கள் இருக்குங்க. உடனே அப்ளை செய்யுங்கள். கால தாமதம் செய்து பணி வாய்ப்பை இழந்து விடாதீங்க.


டிகிரி முடித்தவர்களுக்கு வங்கிப்பணியின் மீது இப்போது ஆர்வம் அதிகம் உள்ளது. எப்படியாவது வங்கியில் பணிக்கு சேர்ந்து விடுவோமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அப்படி டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு வந்து இருக்கு. அட ஆமாங்க. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும்ட 07.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். குறைவான நாட்களே இருக்கு. அதனால மறக்காம விண்ணப்பம் செய்து விடுங்கள்.


அப்ரண்டிஸ் (Apprentice)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1500


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


ஊக்கத்தொகை: ரூ. 12,000 - 15,000


தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பொது அறிவு அல்லது வங்கி சார்ந்த கேள்விகள், கணிதம் மற்றும் திறனறி, ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர கால அளவில் நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2025


விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.800. எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.175, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 400.


மிகவும் குறைந்த நாட்களே இருக்கு. அதனால உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க. மறந்திடாதீங்க. மறந்து இருந்து வேலை வாய்ப்பை இழந்திடாதீங்க.

Post a Comment

0 Comments