Job in Dindigul: திண்டுக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காத்திருக்கும் வேலைகள்! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்!

Follow Us

Job in Dindigul: திண்டுக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காத்திருக்கும் வேலைகள்! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்!

 திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                                 


என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.



1. Medical Officer


காலியிடங்கள்: 01

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.60000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி: MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



2. ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட்


காலியிடங்கள்: 01

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.23,000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

கல்வி தகுதி: BASLP Courses from a recognized institution

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



3. Occupational Therapist


காலியிடங்கள்: 01

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.23,000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொழில் சிகிச்சையில் இளங்கலை/ முதுகலைப் பட்டம்.

வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



4. Health Inspector Grade-II


காலியிடங்கள்: 02

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.14,000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி:

1. தாவரவியல்/ உயிரியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் 12வது (HSC)

2. எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழி புலமை அவசியம்.

3. அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் / அறக்கட்டளை / பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / சுகாதார ஆய்வாளர் பாடப் பயிற்சிக்கான இரண்டு வருடப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட காந்திகிராம கிராமப்புற நிறுவனப் பயிற்சிப் படிப்புச் சான்றிதழ் உட்பட.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



5. Multipurpose Hospital Worker


காலியிடங்கள்: 06

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.8,500/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி. எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



6. Staff Nurse


காலியிடங்கள்: 71

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.18,000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி (DGNM) டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., நர்சிங்.

வயது வரம்பு: 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



7. Lab Technician Grade-III


காலியிடங்கள்: 17

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.13,000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி:

1. பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பப் படிப்பில் (ஒரு வருட கால அளவு) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும்

3. நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலைகளைச் செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



8. Pharmacist


காலியிடங்கள்: 03

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.15,000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி: D.Pharm/B.Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://dindigul.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு முறை தெளிவாக வாசித்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவண நகல்களை சுய சான்றொப்பமிட்டு, இணைத்து, கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

மீனாட்சி நாயக்கன்பட்டி,

திண்டுக்கல்- 624002

தொலைப்பேசி எண்: 0451-2432817.


விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை


தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2025

Post a Comment

0 Comments