சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 9 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முதன்மை திட்ட இணை அலுவலர், திட்ட இணை அலுவலர் மற்றும் திட்ட உதவியாளர் ஆகிய 3 பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களால் நிரப்பப்பட உள்ளது.
திட்ட இணை அலுவலர் பதவி:
காலிப்பணியிடம் - 7
தகுதி - கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கட்டிட மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், பயோ டெக்னாலஜி பொறியியல், மெக்கானிக்கல் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒரு படிப்புகளில் இளங்கலை பட்டம்.
கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, இயற்பியல், மருத்துவ இயற்பியல், கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கட்டிட அல்லது சுற்றுச்சூழல் மேலாண்மை, பிசியோதெரபி, ஃபார்மஸி அல்லது கால்நடை அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒரு படிப்புகளில் முதுகலை பட்டம்.
சம்பளம் : ரூபாய் 25 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11ம் தேதி ஜுலை 2025
திட்ட உதவியாளர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி : கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, மருத்துவ இயற்பியல் அல்லது இயற்பியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது பிரிவில் இளங்கலை பட்டம்
சம்பளம் : ரூபாய் 20 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11ம் தேதி ஜுலை 2025
முதன்மை திட்ட இணை அலுவலர் :
காலிப் பணியிடம் - 1
தகுதி : அறிவியல் அல்லது பொறியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டமும், 3 ஆண்டுகள் ஆய்வும் செய்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூபாய் 49 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11ம் தேதி ஜுலை 2025
வயது வரம்பு:
மேலே குறிப்பிட்ட 3 பதவிகளுக்கும் விண்ணப்பிக்க வயது 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://clri.org/ என்ற இணையதளத்தில் சென்று அதில் கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து
0 Comments