மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 'வாழ்நாள் உயிர் சான்றிதழ்' பெற வேண்டாம்! தமிழ்நாடு அரசு

Follow Us

மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 'வாழ்நாள் உயிர் சான்றிதழ்' பெற வேண்டாம்! தமிழ்நாடு அரசு

 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ் (life certificate) பெற வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

                                                                              


மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்‌ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்‌ ஒரு பகுதியாக பராமரிப்பு உதவித்‌ தொகை (Maintenance Allowance) ரூ. 2000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல்‌ கடும்‌ உடல்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌, மனவளர்ச்சி குன்றியோர்‌, முதுகு தண்டுவடம்‌, பார்கின்சன்‌ நோய்‌, தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல்‌ பாதிப்பு, தசைச்சிதைவு ஆகிய நோய்கள்‌ மற்றும்‌ தொழுநோயால்‌ பாதிப்படைந்தோர்‌ என என எராளமானோர் இத்திட்டத்தின்‌ கீழ்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறை மூலம்‌ பயன்பெற்று வருகின்றனர்‌.


இந்த நிலையில், பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ் பெற வேண்டாம் என மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 வகையான பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம் தரவுகள் சரிபார்த்து, தகுதியான பயனாளிகளுக்கு உதவித்தொகை தரப்படுகிறது.

Post a Comment

0 Comments