Tatkal Train Tickets: ஆதார் எண்ணை இணைத்தால்தான் தட்கல் ரயில் டிக்கெட்- ஜூலை 1 முதல் அமல்!

Follow Us

Tatkal Train Tickets: ஆதார் எண்ணை இணைத்தால்தான் தட்கல் ரயில் டிக்கெட்- ஜூலை 1 முதல் அமல்!

 தட்கல் முறையில் ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு ஜூலை 1 செவ்வாய்க்கிழமை முதல் ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது.

Aadhaar Tatkal Train Tickets

                                                                          


தட்கல் முறையில் ரயில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், பயணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், ரயில்வே சில முக்கிய மாற்றங்களை அறிவித்தது.


இத்திட்டம் முன்பதிவு பயணச் சீட்டுகள் தொடர்பான தவறான பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


ஜூலை 1 முதல் அமலாகும் புதிய விதிகள்:


2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும், இந்த புதிய விதியின்படி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் தட்கல் முறையில் பயணச் சீட்டுகளை ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.


2025 ஜூலை 15 முதல் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் தட்கல் பயணச் சீட்டு முன்பதிவுகளுக்கு ஆதார் அடிப்படையிலான ஒருமுறை கடவு எண் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


அதாவது ஜூலை 15 முதல், கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு கவுண்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தட்கல் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் போது பயணிகளால் வழங்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவு எண் அங்கீகாரம் தேவைப்படும்.


மொத்தமாக முன்பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில், ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட பயணச் சீட்டு முகவர்கள் முன்பதிவுக்கான இணையதள பக்கத்தில் முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு பயணச் சீட்டு தொடங்கும் முதல் நாளில் தட்கல் முறையில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


குளிர் சாதன வசதியுடன் கூடிய வகுப்புகளுக்கு, இந்த நேரக் கட்டுப்பாடு காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரையிலும், குளிர் சாதன வசதி அல்லாத வகுப்புகளுக்கு, காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும் பொருந்தும்.


பயணிகளின் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயனர் தங்களது சுயவிவரங்களுடன் ஆதார் இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.


Post a Comment

0 Comments