மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) அமைப்புகளில் உள்ள விஞ்ஞானி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 148 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விஞ்ஞானி - பி (Scientist 'B') 127, விஞ்ஞானி/ இன்ஜினியர்-பி (Scientist/Engineer 'B') 9, விஞ்ஞானி- பி (Scientist 'B') 12 என மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வி தகுதி: இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல் & தொடர்பியல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணினி அறிவியல் & பொறியியல், எலெக்ட்ரிக்கல், உலோகவியல், இயற்பியல், வேதியியல், கெமிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு/ முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் அந்தந்த பாடப்பிரிவுகளுக்கான தாளில் GATE தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு 35 வயது, ஒபிசி பிரிவினருக்கு 38 வயது, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 வயது வரை இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரையும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது.
சம்பளம்: அடிப்படை சம்பளம் ரூ.56,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கொடுப்பனைகள், அகவிலைப்படி மற்றும் இதர சலுகைகளுடன் ஒரு மாதத்திற்கு தோராயமாக ரூ.1 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://rac.gov.in/ என்ற DRDO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்
0 Comments