தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள நபர் இயற்கையாக மரணம் அடைந்தால் அவரின் குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000 மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.22,500 வழங்கப்படும்.இதில் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.2,500 தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் அளிக்கப்பட்டிருப்பின் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உறுப்பினராக உள்ள நபரின் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000 மட்டுமே வழங்கப்படும்.எனவே முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான ஓய்வூதியம் மற்றும் எச்.ஐ.வி.
தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குழந்தைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.இதனை பெற நிகழ்வு நடைபெற்ற நாளில் இருந்து 6 மாததிற்குள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தனி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.மேலும் தவிர்க்க இயலாத காரணங்களினால் காலதாமதமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுக்கும் உரிய அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகு பயன்பெற முடியும் (காலதாமத காலம் அதிகபட்சம் 1 ½ ஆண்டு வரை) எனவே மேற்கண்டவாறு முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments