தொட்டில் குழந்தைத் திட்டம்: உதவியாளா், காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Follow Us

தொட்டில் குழந்தைத் திட்டம்: உதவியாளா், காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 விழுப்புரம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் காலியாகவுள்ள உதவியாளா், காவலா் பணிக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                             


இரு காலிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பவா்கள் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.4,500 வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் 42 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். தொகுப்பூதியத்தின் அடிப்படையில் இரு பணியிடங்களும் நிரப்பப்படும்.

இதற்கான விண்ணப்பத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் பழைய உணவகக் கட்டடப் பகுதியிலுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15 நாள்களுக்குள் இந்த அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். தகுதிவாய்ந்த நபா்கள் பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவா் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments