சென்னை ஏர்போர்ட் வேலை வாய்ப்பு; 393 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 சென்னை, விஜயவாடா, கோவா உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

                                                                                        


மொத்தம் 393 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் 30.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


ASSISTANT (SECURITY)


காலியிடங்களின் எண்ணிக்கை: 166


கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 01.06.2025 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஒ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம்: ரூ. 21,500


SECURITY SCREENER


காலியிடங்களின் எண்ணிக்கை: 227


கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 30,000


தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.aaiclas.aero என்ற இணையதளப்பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025


இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய www.aaiclas.aero என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Post a Comment

0 Comments