பிரபல வங்கியில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை..! ரூ.38,000 சம்பளத்தில்...

Follow Us

பிரபல வங்கியில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை..! ரூ.38,000 சம்பளத்தில்...

 Associate Officers (Sales) பதவிக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4.59 லட்சம் முதல் ரூ. 6.19 லட்சம் வரை (மாதத்திற்கு சுமார் ரூ. 38,000 வரை) சம்பளமாக வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

                                                                                


விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD (பொது/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் என வயது தளர்வு அளிக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 350 ஆகும்.


விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டத் தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில், கணினி அடிப்படையிலான ஆன்லைன் திறனறி தேர்வு (Computer Based Online Aptitude Test) நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் (Interview) நடத்தப்படும்.


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: ஜூன் 10, 2025


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 22, 2025


தேர்வு தேதி: ஜூலை 06, 2025


ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஃபெடரல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.federalbank.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments