லைப் இன்சூரன்ஸ் காப்ரேஷன் ஆஃப் இந்தியா, பல்வேறு காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்களில் இணைந்த பலரும் அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக தங்களால் முடிந்த தொகையில் எதிர்கால நலனுக்காகவும் குடும்பத்திற்காகவும் ஒரு பெரிய தொகையை சேமித்து வருகின்றனர்.
அந்த வகையில் எல்.ஐ.சியில் இருக்கும் மிக அற்புதமான திட்டங்களில் இந்த ஜீவன் ஷிரோமணி திட்டமும் ஒன்று. இந்த பிளானில் குறைந்த கால இடைவெளியில் ஒரு பெரிய தொகையை சேமித்திடலாம். கடந்த
டிசம்பர் 19, 2017 அன்று இந்த ஜீவன் ஷிரோமணி ( பாலிசி எண் 847) பாலிசியை எல்.ஐ.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இது சந்தை முதலீட்டில் இணைக்கப்படாத, வரையறுக்கப்பட்ட பிரீமியம் பணம் திரும்பப் பெறும் திட்டமாகும். இதில் மூன்று விருப்ப ரைடர்கள் உள்ளன. இந்த ஸ்கீமில் குறைந்தபட்ச காப்பீடு தொகை - ரூ .1 கோடி ஆகும். அதிகபட்ச காப்பீடு தொகைக்கு எந்த வரம்பு இல்லை. பாலிசி காலம் மொத்தம் 14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகள். அதே சமயம் பிரீமியம் செலுத்த வேண்டிய காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது 18.
இந்த பாலிசியில், பாலிசிதாரர்கள் இறக்கும் வரை, குறிப்பிட்ட காலத்தில் பணம் செலுத்து வேண்டும். இது தவிர, முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை வழங்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.94,000 செலுத்தினால், நான்கு ஆண்டுகளில் பிரீமியம் சுமார் ரூ.45 லட்சமாக இருக்கும். ஆனால் முதிர்ச்சியடையும் போது இதை விட பல மடங்கு அதிக பலன்களைப் பெறுவீர்கள். இந்த திட்டம் பற்றி மேலும் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவர்களை அணுகலாம் அல்லது ஆன்லைனிலும் செக் செய்யலாம்.
0 Comments