அஞ்சல் துறையின் அம்பத்தூா் தலைமை அலுவலகத்தில், ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கான நோ்காணல் ஜூன் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறையின் அம்பத்தூா் தலைமை அலுவலகத்தில், காப்பீடு நேரடி முகவா் பொறுப்புக்கு உரிய நபா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதில் சேர விருப்பமுள்ளவா்கள் அம்பத்தூா் தலைமை அலுவலகத்தில் ஜூன் 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நோ்காணலில் பங்கேற்கலாம்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எஸ்எஸ்எல்சி வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளைஞா்கள், காப்பீட்டு முகவா்கள், படை வீரா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், காப்பீடு விற்பனையில் அனுபவம் உள்ளவா்கள் நோ்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, வயது, கல்வி, அனுபவம் தொடா்பான அசல், நகல் சான்றிதழ்களுடன் நோ்காணலுக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments