கல்விச்சான்று அடிப்படையில் ஆதாரில் DOB மாற்ற ஆணை!

 பிறப்புச் சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் போன்ற கல்வி ஆவணங்களின் அடிப்படையில் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

                                                                                


தனது ஆதார் அட்டையில் உள்ள தவறான பிறந்த தேதி காரணமாக குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளார். மனுதாரரின் கணவர் ராணுவத்தில் பணியாற்றிய போது இறந்த நிலையில், அவரது ஓய்வூதியத்தை பெறுவதில் ஆதார் அட்டையில் இருந்த தவறான DOB பெரும் தடையாக இருந்தது. பலமுறை அதிகாரிகளை அணுகியும் எந்தவிதமான பலனும் கிடைக்காத நிலையில் அவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.


இந்த தீர்ப்பானது, ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதி பிரச்சனையால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் பொதுமக்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. வங்கிக் கணக்குகள் திறப்பது, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவது போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக இருக்கும் நிலையில், அதில் உள்ள பிழைகளால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, முதியோர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் இது போன்ற தவறுகளை சரி செய்ய முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இனி கல்விச் சான்றுகளை பயன்படுத்தி எளிதாக ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை திருத்தம் செய்ய வழிவகை செய்துள்ளது. இது, அதிகாரிகளின் அலைக்கழிப்பை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Post a Comment

0 Comments