சேமிக்க விரும்புகிறவர்களுக்காக வங்கிகள், தபால் நிலைங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
அதுவும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் ஏற்ற விதமான திட்டங்கள் உள்ளது. இதில் தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டங்களில் குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தினை பெறலாம். இந்தியாவில் வசிக்கும் எவர் வேண்டுமானாலும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சேமிப்பு கணக்குகளை துவங்கலாம்.
நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்தை பெற விரும்புகிறவர்களுக்காக தபால் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டத்தை (POMIS) செயல்படுத்தி வருகிறது. அரசாங்க ஆதரவுள்ள இத்திட்டம் பிரபலமானதாக உள்ளது. அத்துடன் கவர்ச்சிகரமான வட்டி விகிதமும் இந்த திட்டத்தில் கிடைக்கும். நிதி பாதுகாப்பு வேண்டுமென்று விரும்புகிறவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலையான வட்டி விகிதமும், மாதாந்திர வருமானமும் இந்த திட்டத்தில் கிடைக்கும். தபால் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டத்தில் அதிகபட்சமாக தனிப்பட்ட கணக்கில் ரூ. 9 லட்சமும், கூட்டு கணக்கு என்றால் ரூ. 15 லட்சமும் டெபாசிட் செய்ய வேண்டும்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை ஆரம்பிக்கலாம். இத்திட்டத்தில் துவங்கப்படும் கணக்கை ஓராண்டு கழித்து முன்கூட்டியே முடித்தது கொள்ளலாம். இதற்கு வைப்புத் தொகையில் இருந்து இரண்டு சதவிகிதம் கழிக்கப்படும். மூன்று வருடங்களுக்கு பின் கணக்கை மூடினால் வைப்புத் தொகையில்1% பிடிக்கப்படும்.
உதாரணமாக தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் ஒருவர் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால் மாதாந்தோறும் வருமானமாக ரூ. 3,083.33 தொகையினை பெறலாம். ரூ. 9 லட்சம் முதலீடு செய்யப்பட்டால் ரூ. 5,550 மாத வருமானமாக கிடைக்கும். ரூ. 15 லட்சம் வைப்புத்தொகைக்கு மாதாந்தோறும் வருமானமாக ரூ. 9,250 தொகையினை முதலீட்டாளர்கள் பெறலாம். தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்துக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
0 Comments