ரியல் எஸ்டேட் : வீட்டுமனை பதிவு, தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு...!

 ரியல் எஸ்டேட் துறையினர் வீட்டு மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

                                                                                 


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள் மற்றும் கட்டப்படும் கட்டிடங்களுக்கு Orine PPA இணையதளம் வாயிலாக முறையான அனுமதி பெறுதல் கட்டாயமாகும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவற்றின் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகை வருவாய்கள் கிராம ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.


மேற்படி மனைப்பிரிவு மற்றும் கட்டடங்களுக்கான அனுமதியினை பொதுமக்கள் எனிதில் பெறும் வகையில் 02.10.2023 முதல் தமிழ்நாடு அரசின் மூலம் ஒற்றை சாளர முறையிலான இணையதளம் (Single Window Portal Online PPA) (https://onlineppa.tn.gov.in) கொண்டு வரப்பட்டு இணையதளம் வாயிலாக மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி 2500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில் 3500 சதுர அடி வரையிலான கட்டிட பரப்பில் தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு உடனடி பதிவின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி சுய சான்று முறையில் Onine PPA இணையதளம் வாயிலாக அனுமதி (sof certificate) அளிக்கப்படுகிறது.


2.500-10,000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு Chine PPA இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னர் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் 10000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு Online PPA இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னர் நகர கிராம திட்டமிடல் இயக்குநாகம் (DTCP) மற்றும் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி வாயிலாக ( Non salt/ certificate) அனுமதி வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சிகளில் புதியதாக அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில் முறையான மின்கம்பங்கள், குடிநீர் வடிகால்கள் ஆகிய அடிப்படை வசதிகள் இருத்தல் மற்றும் திறந்த வெளி நிலங்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியின் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டு இருத்தல் மற்றும் நிறைவேற்றப்பட்டு இருப்பின் இணையதளம் ஆகிய நிபந்தனைகள் வழியே அனுமதி அளிக்கப்படுகிறது.


இவ்வகையில் மனைப்பிரிவுகள் மற்றும் கட்டடங்களுக்கு அனுமதி பெறுதல் சார்ந்து மேற்படி தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை அனைவரும் பின்பற்றி தங்களின் மனைப்பிரிவு மற்றும் கட்டடங்களுக்கான அனுமதியினை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றிடுமாறு இதன் வழி தெரிவிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

Post a Comment

0 Comments