சிறிய அளவில் மற்றும் 100 நாட்டுக்கோழிப் பண்ணை வைத்து தொழிலைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்குத் தமிழ்நாடு அரசு தரப்பில் 50% மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இது கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பயனடையும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு கை கொடுத்து உதவி கொண்டிருக்கிறது.. தற்போது இந்த திட்டத்தில் புதிய முடிவு எடுக்கப்பட்டு, அது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை, நீலகிரி தவிர்த்து பிற மாவட்டங்களில், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், கோழிப்பண்ணை அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம், கடந்த 2024-25ம் ஆண்டு முதல் கால்நடை துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
பயனாளிகள் எண்ணிக்கை
அந்தவகையில், அனைத்து மாவட்டங்களிலும் 100 எண்ணிக்கையிலான (250 கோழிகள்/ அலகு) நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள் 50 சதவிகித மானியத்தில் (ரூ.1,47,740) மாநில அரசால் நிறுவப்பட்டது..
ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக் கோழிக் குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. முட்டைகள், குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமும், வளர்ந்த பெண் கோழிகள் (ம) சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்தும், ஒரு பயனாளி வருடத்திற்கு ரூ.2,31, 000 வரை வருமானம் ஈட்டுகிறார்கள்.
பயனாளிகள் எண்ணிக்கை
இந்நிலையில், இந்த திட்டத்தில் புதிய பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.. அதாவது, 100 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு பயனாளிகள் எண்ணிக்கையை, 360 ஆக உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு அதிகாரிகள் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் சொன்னதாவது:
"நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க, கோழிக்கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு, 4 வயதுடைய கோழிக்குஞ்சுகள் போன்றவற்றின் மொத்த செலவில், 50 சதவீத மானியம், மாநில அரசால் வழங்கப்படுகிறது.
விதிகள் என்னென்ன
கோழிக்கொட்டகை அமைக்க, குடியிருப்பு மற்றும் நீர் நிலைகளில் இருந்து விலகி இருக்கக் கூடிய, குறைந்தபட்சம், 625 சதுர அடி சொந்த நிலம் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கனவே, இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்கக்கூடாது.
3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஆர்வமுள்ள நபர்கள் அருகில் உள்ள, கால்நடை நிலையங்களில் விண்ணப்பிக்கலாம். ஒரு பயனாளிக்கு, ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து 625 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
ஒரு பயனாளி 72 வாரங்கள் வரை, நாட்டுக் கோழிகளை வளர்த்து, ஆண்டுக்கு 10,000 முட்டைகள் உற்பத்தி செய்ய முடியும். குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். முட்டைகளை விற்கலாம். வளர்ந்த கோழிகள் மற்றும் சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். இவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்" என்று தெரிவித்துள்ளனர்.
0 Comments