சவுத் இந்தியா வங்கியில் ஜூனியர் ஆபீசர், பிசினஸ் புரோமஸ் ஆபீசர் என பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
நாட்டில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றாக சவுத் இந்தியா வங்கி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கி ஒரு தனியார் வங்கியாகும். நாடு முழுவதும் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் ஜூனியர் ஆபீசர், பிசினஸ் புரமோஷன் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவவரை அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.7.44 லட்சம் ஆண்டுக்கு சம்பளமாக வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆனது ஆகும். 3 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதன் பிறகு ஊழியர்களின் செயல்பாடு மற்றும் வங்கியின் விருப்பத்தின் அடிப்படையில் தேவைப்பட்டால் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள். இது முழுவதும் வங்கி நிர்வாகத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது ஆகும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
எப்படி விண்ணப்பிப்பது
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் டெஸ்ட் , நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்டி/ எஸ்சி பிரிவினருக்கு ரூ.200 கட்டணம் ஆகும்.
விருப்பமும் தேவையான கல்வி தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.southindianbank.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு வரும் 19.05.2025 முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 26.05.2025 ஆகும்.
0 Comments