டிகிரி போதும்.. பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை.. ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

 தென்காசி மாவட்டத்தில் 2025-26 மறு சீரமைக்கப்பட்ட இராஷ்ட்ரிய கிராம் சுவராஞ் அபினான் (ஆர்.ஆர்.ஜி.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு (Tenkasi Panchayat Recruitment 2025) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

                                                                             


பணியின் விவரங்கள்:

ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் (DRCP Faculty) – 1

கணினி உதவியாளர் (Assistant-cum-Data Entry Operator) – 1

வட்டார வள மைய பயிற்றுநர் (BRCP Trainers) – 10

தகுதிகள்:

* ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் பதவிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு பயிற்சி ஒருங்கிணைப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* கணினி உதவியாளர் பதவிக்கு குறைந்தபடசம் 3 ஆண்டு பணி அனுபவம் தேவை.

* வட்டார வள மைய பயிற்றுநர் பதவிக்கு SIRD மூலம் பயிற்சி பெற்ற பயிற்றுநர் அல்லது பிற அரசு திட்டத்தில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

* ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் பதவிக்கு MSW/MBA பெற்றிருக்க வேண்டும்.

* கணினி உதவியாளர் பதவிக்கு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் DTP தெரிந்திருக்க வேண்டும்.

* வட்டார வள மைய பயிற்றுநர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

* ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் பதவிக்கு மாதத்திற்கு ரூ.50,000 சம்பளம் வழங்கப்படும்.

* கணினி உதவியாளர் பதவிக்கு மாதத்திற்கு ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும்.

* வட்டார வள மைய பயிற்றுநர் பதவிக்கு மாதத்திற்கு ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? தென்காசி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tenkasi.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள கூகுள் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு செயலர்/ மாவட்ட பயிற்சி அலுவலர் (ஊரக வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்காசி என்ற முகவரியிலும் 04633 - 298488 என்ற தொலைபேசி எண் மற்றும் dpstenkasi@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

Post a Comment

0 Comments