மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. இந்திய ரயில்வே 5 சலுகைகள் அறிவிப்பு

Follow Us

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. இந்திய ரயில்வே 5 சலுகைகள் அறிவிப்பு

 India Railways Senior Citizens Scheme In Tamil: நமது நாட்டின் உயிர்நாடியாக இந்திய ரயில்வே தற்போது இயங்கி வருகிறது.  

                                                                                    


தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதே நேரத்தில், பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஒவ்வொரு நாளும் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பல்வேறு திருதங்களை செய்து வருகின்றது.

இந்நிலையில் இந்தியன் ரயில்வே மூத்த முடிமக்களுக்கு பல சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் இந்த வேளையில், அவை என்னென்னவை? அவற்றில் என்ன நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே விரிவாக காண்போம்.

ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கான இந்திய ரயில்வே, கீழ் பெர்த், சக்கர நாற்காலி, பேட்டரியால் இயக்கப்படும் கார் மற்றும் சிறப்பு டிக்கெட் கவுண்டர் போன்ற பல வசதிகளை வழங்கியுள்ளது. ஆனால் முன்னதாக வழங்கப்பட்ட கட்டணச் சலுகை தற்போது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, எனினும் இந்த சலுகையை மீண்டும் தொடங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரயில்வே கூறி வருகின்றது. அந்த வகையில் தற்போது மூத்த குடிமக்கள் பயணத்தில் எந்தப் பிரச்சினையையும் சந்திக்காத வகையில் பயணிகளின் வசதியை அதிகரிக்க ரயில்வே தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

1. கீழ் படுக்கை வசதி | Lower berth facility
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ரயிலில் கீழ் பெர்த்கள் வழங்கப்படுகின்றன, இதனால் அவர்கள் ஏறுவதிலும் இறங்குவதிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கும். இந்த வசதி ஸ்லீப்பர், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயர் பெட்டிகளில் வழங்கப்படுகிறது. ரயில் புறப்பட்ட பிறகும் ஏதேனும் கீழ் பெர்த் காலியாக இருந்தால், அவை மூத்த குடிமக்களுக்கு மட்டுமே முன்னுரிமையுடன் வழங்கப்படும்.

2. சக்கர நாற்காலி வசதி | Wheelchair Accessible
ரயில் நிலையங்களில் இலவச சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன. நடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். சக்கர நாற்காலிகளுடன், உதவிக்கு சுமை தூக்குபவர்களும் வழங்கப்படுகிறார்கள்.

3. சிறப்பு டிக்கெட் கவுண்டர் | Special ticket counter
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக ரயில் நிலையங்களில் தனித்தனி டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

4. பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள் (கோல்ஃப் வண்டிகள்) | Battery Operated Vehicles (Golf Carts)
பெரிய ரயில் நிலையங்களில் பேட்டரியால் இயக்கப்படும் வண்டிகள் (கோல்ஃப் வண்டிகள்) இலவசமாக வழங்கப்படுகிறது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக நேரம் நடக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், நடைமேடைகளை அடைய இந்த வசதி வழங்கப்படுகிறது.

5. உள்ளூர் ரயில்களில் சிறப்பு இருக்கைகள் | Special seats in local trains
மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களின் உள்ளூர் ரயில்களில், மூத்த குடிமக்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது பயணத்தின் போது அவர்களுக்கு வசதியான இருக்கையை வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கான கட்டணக் குறைப்பு மீண்டும் தொடங்குமா?
முன்னதாக, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% தள்ளுபடியும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% தள்ளுபடியும் ரயில் கட்டணத்தில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தள்ளுபடி 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயின் போது முழுமையாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments