PF Claim Rejected : ஊழியரின் வருங்கால வைப்பு நிதி (EPF) கிளெய்ம் நிராகரிக்கப்பட்டால் கவலைப்படத் தேவையில்லை.
உங்கள் கிளெய்ம் ஏன் நிராகரிக்கப்பட்டது மற்றும் அதைத் திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன்பு பிஎப் முன்கூட்டியே எடுக்கலாமா? என்ற கேள்வி சிலருக்கு இருக்கும். ஆம், உங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகையை மருத்துவ உதவி, திருமணம், வீடு கட்டுதல், படிப்புச் செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பிஎப் கிளெய்மை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள். அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் உங்களின் பிஎப் கிளெய்ம் நிராகரிக்கப்படும்.
EPF கிளெய்ம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள்:
தவறான அல்லது முழுமையற்ற தகவல்: வங்கி கணக்கு எண், பெயர் அல்லது பிற விவரங்களில் பிழை இருந்தால், கிளெய்ம் தானாகவே நிராகரிக்கப்படும்.
UAN ஆக்டிவேஷனில் இல்லை: உங்கள் UAN (யுனிவர்சல் அக்கவுண்ட் எண்) ஆக்டிவேஷனில் இல்லை என்றால், பிஎப் கிளெய்ம் செய்ய முடியாது.
கணக்கில் போதுமான தொகை இல்லாதது: உங்கள் EPF கணக்கில் உள்ள தொகையை விட அதிகமாக கோரினால், கிளெய்ம் நிராகரிக்கப்படலாம்.
தகுதியில்லாத காரணம்: EPF விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படாத காரணத்தைக் குறிப்பிட்டால் கிளெய்ம் மறுக்கப்படும்.
வேலை விவரங்களில் தவறு: பிஎப் அக்கவுண்டில் நீங்கள் பணிபுரிந்த நிறுவனங்கள் தொடர்பான தகவலில் முரண்பாடு இருந்தால், கிளெய்ம் தானாகவே நிராகரிக்கப்படும்.
தொழில்நுட்ப பிழை: EPFO போர்ட்டலில் பிழை ஏற்பட்டாலோ அல்லது டேட்டா இணைப்பு தவறாக இருந்தாலோ கிளெய்ம் தோல்வியடையலாம்.
EPF கிளெய்மை மீண்டும் செய்வது எப்படி?
நிராகரிப்பு காரணத்தை சரிபார்க்கவும்: EPFO அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்நுழைந்து, "Track Claim Status" ஆப்ஷனில் கிளெய்ம் ஸ்டேட்டஸை பார்க்கவும்.
பிழைகளை சரிசெய்யவும்: வங்கி விவரங்கள், UAN ஆக்டிவேஷன், வேலை வரலாறு போன்றவற்றை சரிபார்த்து திருத்தவும்.
தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்: ஆதார், பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களில் தகவல்கள் முழுமையாக இருப்பதை உறுதிப்படுத்தவும்.
முதலாளி/HR உடன் தொடர்பு கொள்ளவும்: சில நேரங்களில் முதலாளியின் சரிபார்ப்பு தேவைப்படும், எனவே அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
மீண்டும் கிளெய்மை சமர்ப்பிக்கவும்: திருத்தப்பட்ட விவரங்களுடன் EPFO போர்ட்டல் மூலம் புதிய கிளெய்மை தாக்கல் செய்யவும்.
EPF கிளெய்ம் நிலையை எப்படி சரிபார்க்கலாம்?
EPFO வலைத்தளத்தில் உள்நுழையவும்.
உங்கள் UAN & பாஸ்வேர்ட் உள்ளிட்டு லாகின் செய்யவும்.
"Track Claim Status" ஐத் தேர்ந்தெடுக்கவும்.
நிராகரிக்கப்பட்ட காரணம் காண்பிக்கப்படும்.
கூடுதல் உதவி தேவைப்பட்டால்: உங்கள் நிறுவன HR அல்லது உள்ளூர் EPF அலுவலகத்தை அணுகவும். அவர்கள் வழிகாட்டுவார்கள். அதன்படி நிராகரிக்கப்பட்ட பிஎப் கிளெய்மை மீண்டும் விண்ணப்பித்து பெறலாம்.
0 Comments