மத்திய அரசு வேலை.. பெரம்பலூரில் பணியிடம்.. டிரைவிங் தெரியுமா? மாதம் ரூ.81,000 சம்பளம்!

Follow Us

மத்திய அரசு வேலை.. பெரம்பலூரில் பணியிடம்.. டிரைவிங் தெரியுமா? மாதம் ரூ.81,000 சம்பளம்!

 பெரம்பலூரில் உள்ள கேவிகே மையத்தில் காலியாக உள்ள டிரைவர், ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன என்று இங்கே பார்க்கலாம்.

                                                                                           


மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் கிரிஷி விக்யான் கேந்த்ரா (KVK) செயல்படுகிறது. வேளாண் அறிவியல் மையம் என்று அழைக்கப்படும் இந்த மையம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளது. விவசாயத்தில் புதுமைகளை புகுத்துவது, விவசாய ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளில் இந்த மையம் ஈடுபட்டு வருகிறது.


திருச்சி அருகே உள்ள பெரம்பலூரில் இந்த ஆய்வு மையம் உள்ளது. இந்த மையத்தில் காலியாக உள்ள டிரைவர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.


பணியிடங்கள் விவரம்:


ஸ்டெனோகிராபர் - 01


டிரைவர் - 01


என மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


கல்வித் தகுதி:


ஸ்டெனோகிராபர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பற்றிய அறிவு அவசியம். ஷார்ட்ஹண்ட் தெரிந்து இருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைளும், 20 தமிழ் வார்த்தைகளும் தெரிந்து இருக்க வேண்டும்.

டிரைவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் வாகனம் ஓட்டிய அனுபவம் அவசியம்.


வயது வரம்பு:


18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகள் அவசியம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 15 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


சம்பளம் எவ்வளவு?


சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 25,500 - 81,000-வரை சம்பளம் வழங்கப்படும். டிரைவர் பணி என்றால் ரூ. 21,700 முதல் ரூ. 69,100- வழங்கப்படும்.


தேர்வு முறை:


தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் என்றால் ரூ.250 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள் என்றால் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?


தேவையான தகுதி சான்றுகள் நகல்களை அட்டெஸ்டடு செய்து ரூ.500 க்கு டிடியுடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


The Chariman,


ICAR - KRISHI VIGYAN KENDRA


Hans Roever Campus,


Valikandapuram, Perambalur-621115


விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.05..2025 ஆகும்.


தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.roeverkvk.res.in/assets/pdf/hrkvk-perambalur-stenographer-and-driver-recruitment-2025-updated.pdf

Post a Comment

0 Comments