சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது இன்று (ஏப்ரல் 23) முதல் ஏப்ரல் 27 ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் என்ன? யாரெல்லாம் இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்பது பற்றிய முழு விபரம் வருமாறு:
எச்சிஎல் நிறுவனத்தில் US Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். பிஇ, பிடெக், எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்புகளை படித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம். 2025ம் ஆண்டில் முதுநிலை படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைக்கு, பணி அனுபவம் என்பது தேவையில்லை. இருப்பினும் கூட இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை என்பது வேண்டும். டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் ஸ்கில்ஸ் இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல கூடாது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பது வழங்கப்படும். பணியாளர்களுக்கு Cab வசதி உள்ளது. ஆனால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இண்டர்வியூ என்பது இன்று (ஏப்ரல் 23) முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை 4 நாட்கள் தினமும் காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL TECH, Sholinganallur ELCOT campus, Tower 4, Chennai-119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூ என்பது Face To Face முறையில் இருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
0 Comments