கோவை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 38 பணியிடங்கள்: குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

 கோவை மாநகராட்சி (Coimbatore Corporation) பொது சுகாதார பிரிவின் கீழ் செயல்படும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

                                                                       


மொத்தம் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.04.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse)


காலியிடங்களின் எண்ணிக்கை: 25


கல்வித் தகுதி: Auxiliary Nurse Midwife Course அல்லது Diploma in General Nursing and Midwife Course (DGNM) அல்லது BSC Nursing படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 14,000


செவிலியர் பணியாளர்கள் (Staff Nurse)


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 18,000


மருந்தாளுநர்கள் (Pharmacist)


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: Diploma in Pharmacy அல்லது B.Pharm படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 15,000


நுண்ணுயிரியலாளர் (Microbiologist)


காலியிடங்களின் எண்ணிக்கை: 3


கல்வித் தகுதி: MSc. Medical Microbiology அல்லது Medical Graduate (MBBS) with Post Graduate Degree, Diploma (Preferably in Microbiology, Virology, Pathology and Other Lab science) படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 25,000 - 40,000


ஆய்வக நுட்புநர் (Lab Technician)


காலியிடங்களின் எண்ணிக்கை: 3


கல்வித் தகுதி: Diploma in Medical Laboratory Technician படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 13,000


பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (Multipurpose Health Worker)


காலியிடங்களின் எண்ணிக்கை: 3


கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: ரூ. 8,500


தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க - https://ccmc.gov.in/img/upload/healthDepJob_2025.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி: மாநகர நல அலுவலர், பொது சுகாதாரப் பிரிவு, மாநகராட்சி பிரதான அலுவலகம் (டவுன் ஹால்), கோயம்புத்தூர் மாநகராட்சி, 1109, பெரிய கடை வீதி, கோயம்புத்தூர் - 641001


விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Post a Comment

0 Comments