காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI) என்பது இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்" ஆகும்.
இந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
உதவி மேலாளர் - Assistant Manager
காலியிடங்கள்: 07
சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- ஊதியமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST - 5 ஆண்டுகள்,
OBC - 3 ஆண்டுகள்,
PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,
PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,
PwBD (OBC) - 13 ஆண்டுகள்
: தேர்வு இல்லை... டிகிரி படித்தவர்களுக்கு சேலம் அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலை!
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://fddiindia.com/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்னர் இந்த பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இங்கே கிளிக் செய்து படித்து பின்னர் விண்ணப்பிக்காத தொடங்கவும்.
விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2025
0 Comments