இனிமேல் பட்டா விவரங்களை பார்ப்பது ஈசி. எப்படி தெரியுமா?

 வருவாய் துறையின் ஆவணங்கள் இருந்தாலும், ஒரு நிலத்தின் சர்வே எண், பட்டா எண் போன்றவற்றை கண்டறிவது என்பது பொதுமக்களுக்கு சில சமயங்களில் மிகவும் சிரமாக இருக்கும்.

Tamil Nadu Government introduced

                                                                            


இதனை எளிமைப்படுத்துவதற்காக, நில ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக அறிய தமிழக அரசு 'Tamilnilam Gioinfo' என்ற புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.


பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் 'Tamilnilam Gioinfo' என்ற செயலியை பதவிறக்கம் செய்தால், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றனரோ அந்த இடத்தின் கூகுள் வரைபடத்துடன் சர்வே எண் விபரங்கள் திரையில் வந்து விடும். மேலும், நில அளவை வரைபடம், பட்டா விபரம் போன்ற விவரங்களையும் அறிய முடியும்.


இதன்மூலம் வீட்டு மனைகள் வாங்கும் போது பொதுமக்கள் எளிதாக பட்டா விவரங்களை அறிந்துகொள்ள முடியும். இன்னும் சில மாதங்களில் இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வருவாய்த்துறையின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். Tamil Nadu Government introduced


Post a Comment

0 Comments