இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பாஸ்போர்ட் பெறுவது முன்பு போல் கடினமான வேலை இல்லை. முன்பு, நீண்ட வரிசையில் நின்று நிறைய ஆவண வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது, இப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்தி ஆன்லைனில் வேலையை மிக எளிதாகச் செய்யலாம்.
நீங்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தால், பாஸ்போர்ட் தயாரிக்கும் செயல்முறையை இப்போதே முடிப்பது நல்லது.
பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான முழுமையான செயல்முறையை விரிவாக அறிந்து கொள்ளலாம்
பாஸ்போர்ட் சேவா போர்ட்டலுடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குங்கள்
ஆன்லைன் பாஸ்போர்ட்டைப் பெற, முதலில் https://passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை போர்ட்டலுக்குச் செல்லவும். இங்கே ஒரு புதிய கணக்கை உருவாக்க, "புதிய பயனர் பதிவு" விருப்பத்தை சொடுக்கவும். தேவையான அடிப்படை தகவல்களை நிரப்பி பதிவை முடிக்கவும்.
கணக்கில் உள்நுழைந்து படிவத்தை நிரப்பவும்
பதிவுசெய்த பிறகு, உங்கள் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் போர்ட்டலில் உள்நுழையவும். பின்னர் "Apply for Fresh Passport/Re-issue" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு ஒரு விண்ணப்பப் படிவம் திறக்கும். அதில் உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித் தகுதி மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும்.
அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு மற்றும் கட்டணம் செலுத்தும் நடைமுறை
படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு "Pay and Schedule Appointment" என்ற விருப்பம் தோன்றும். இங்கிருந்து பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) அல்லது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் (RPO) ஒரு அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்து தேவையான கட்டணங்களைச் செலுத்துங்கள். பணம் செலுத்திய பிறகு, உங்கள் விண்ணப்பக் குறிப்பு எண் (Application Reference Number - ARN) மற்றும் சந்திப்பு விவரங்கள் அடங்கிய விண்ணப்ப ரசீதைப் பதிவிறக்கவும்.
ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பு செயல்முறை
சந்திப்புத் தேதியன்று, அசல் ஆவணங்கள் மற்றும் அவற்றின் நகல்களுடன் PSK/RPO என்னும் உங்கள் பகுதியில் உள்ள பாஸ்போட் அலுவகத்திற்க்குச் செல்லவும். பயோமெட்ரிக் செயல்முறை மற்றும் ஆவண சரிபார்ப்பு அங்கு நடைபெறுகிறது. இதற்குப் பிறகு போலீஸ் சரிபார்ப்பு செயல்முறை நடைபெறுகிறது.
பாஸ்போர்ட் வீட்டிற்கு வந்து சேரும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர் கொடுத்த முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் பாஸ்போர்ட் அனுப்பப்படும். சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு, பாஸ்போட் கிடைக்க 30 முதல் 45 நாட்கள் ஆகும். அதேசமயம், தட்கல் முறையில் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு, பாஸ்போர்ட் 7 நாட்களில் கிடைத்து விடும். இந்தியா போஸ்ட்டின் ஸ்பீட் போஸ்ட் போர்ட்டல் மூலம் உஙக்ள் பாஸ்போர்ட் டெலிவரி நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.
0 Comments