மாதம் மாதம் இஎம்ஐயில் லோன் கட்டுறீங்களா? திடீரென ஆர்பிஐ அறிமுகம் செய்த புதிய விதி.. கவனம்

 இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இஎம்ஐ செலுத்துவதில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, மாதாந்திர தவணைகள் (இஎம்ஐக்கள்) மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

                                                                 


இந்த புதிய விதிகள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கடன் வாங்குபவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வழி வகுக்கும். வீட்டுக் கடன்கள், கார் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் மீதான எதிர்பாராத கட்டணங்களை, மாற்றங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


சமீப காலங்களில் பல கடன் வாங்குபவர்கள் திடீர் EMI அதிகரிப்புகள், EMI செலுத்துவதற்கான கால நீட்டிப்புகள் மற்றும் தெளிவற்ற கடன் விதிமுறைகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதாவது நீங்கள் 10 ஆயிரம் இஎம்ஐ கட்டி வந்துள்ளீர்கள் என்றால் திடீரென.. உங்கள் வங்கி இனி 15 ஆயிரம் கட்ட வேண்டும் என்று சொல்லலாம். அல்லது 1 வருட இஎம்ஐயை இனி ஒன்றரை வருடம் என்று கூட உயர்த்தலாம்.

இதை தடுக்கவே புதிய ரிசர்வ் வங்கி விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கடன் வாங்குபவர்களை இதுபோன்ற எதிர்பாராத மாற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின் கீழ் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.


கடன் திருப்பிச் செலுத்தும் விதிகளில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன:

கடன் வழங்குபவர்கள் கடன் காலத்தை அதிகரிப்பதற்கு முன் கடனாளியின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

வட்டி விகித உயர்வு காரணமாக EMI அல்லது காலவரையறையில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்

கடன் வாங்குபவர்கள் கடன் வழங்குவதற்கு முன் முழுமையான கடன் விவரங்களுடன் ஒரு முக்கிய உண்மை அறிக்கையை (KFS) பெற வேண்டும்..

கடன் வாங்குபவரின் ஒப்புதல் இல்லாமல் தானியங்கு EMI அதிகரிப்பு அல்லது கால நீட்டிப்புகள் செய்ய அனுமதி இல்லை.

முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் இன்னும் வெளிப்படையாக வேண்டும்.

கடன் அறிக்கைகளில் வட்டி மற்றும் மற்ற விதிகள் பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

முன்பு, வங்கிகள் உங்கள் EMIயை அதிகரிக்கலாம் அல்லது உங்களிடம் கேட்காமலேயே உங்கள் கடன் காலத்தை நீட்டிக்கலாம். இப்போது, ​​கடன் வாங்குபவர்கள் இதில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். அவர்களை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது.

கடன் வாங்கும் போது வழங்கப்படும் முக்கிய உண்மை அறிக்கை (KFS) இப்போது அனைத்து கடன்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன் தொகை எவ்வளவு? அனுமதிக்கப்பட்ட வட்டி விகிதம் எவ்வளவு?


கடன் காலம் மற்றும் EMI விவரங்கள் என்ன? வட்டி விகிதம் என்ன? கடனுக்கான மொத்த செலவு எவ்வளவு? மற்ற அனைத்து கட்டணங்கள் குறித்த விவரங்கள் முறையாக இதில் இடம்பெற்று இருக்க வேண்டும்.

இது தொடர்பாக நீங்கள் கடன் வாங்கி உள்ள வங்கிகளில் ஆலோசனைகளை பெற முடியும். சமீப காலங்களில் பல கடன் வாங்குபவர்கள் திடீர் EMI அதிகரிப்புகள், EMI செலுத்துவதற்கான கால நீட்டிப்புகள் மற்றும் தெளிவற்ற கடன் விதிமுறைகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இனி அது போன்ற பிரச்சனைகள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments