அரசு ஊழியர்களுக்கான விதியில் திருத்தம் : இனி என்னென்ன செய்ய வேண்டும்?

 அரசு ஊழியர்கள் புத்தகம் எழுதி வெளியிடும் விதியில் தமிழக அரசு திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Amendment in government employees rules

                                                                                


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும்.


அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் படி, ஒரு இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர்கள், பதிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.


இந்த விதியில் தான் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.


அரசாணை சொல்வது என்ன? Amendment in government employees rules


26.3.2025 தேதியிட்ட அந்த அரசாணையில், அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களைத் தவிர, இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் தொழில்முறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதி வெளியிடுவதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு அதிகாரிகள் எழுதும் புத்தகங்களில் மாநிலத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனமோ, தாக்குதலோ இருத்தல் கூடாது.


மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரையோ, உள்ளடக்கமோ கூடாது. இதற்கான சுய அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.


அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது.


பதிப்பகத்தாரிடமிருந்து ஒருமுறை தொகை அல்லது ராயல்டி பெறுவதற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும்.


அரசு ஊழியர்களின் புத்தகங்கள் சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.


இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த விதியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Amendment in government employees rules

Post a Comment

0 Comments