அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! மீண்டும் அமலாகும் பழைய ஓய்வூதியத் திட்டம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

Follow Us

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! மீண்டும் அமலாகும் பழைய ஓய்வூதியத் திட்டம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

 கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

                                                                          


இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் குறைகிறது என்பதால் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.


தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், "பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்." "அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடக்கிறது". "அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments